நபி Yunus

21 / 25يونسJonah13 வசனங்கள்

யூனுஸ் குர்ஆனில் “மீனுடையவர்” என்று அழைக்கப்படுகிறார்.

1

கப்பலும் மீனும்

யூனுஸ் சுமை ஏற்றப்பட்ட ஒரு கப்பலுக்குத் தப்பிச் செல்கிறார். அவர்கள் சீட்டுப் போடுகின்றனர்; அவர் தோற்றவர்களில் ஒருவராகிறார்; அவர் குற்றம் சாட்டத்தக்கவராக இருக்கும்போது மீன் அவரை விழுங்குகிறது. அவர் அல்லாஹ்வைத் துதிப்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால், மக்கள் எழுப்பப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார். அவர் நோயுற்ற நிலையில் வெறுமையான கரையில் எறியப்படுகிறார்; அவர் மீது ஒரு சுரைக்காய்க் கொடி வளர்கிறது.

வசனங்களைக் காட்டு (10)

وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ ﴿١٣٩﴾

மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.

إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ ﴿١٤٠﴾

நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -

فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ ﴿١٤١﴾

அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).

فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌۭ ﴿١٤٢﴾

ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று.

فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ ﴿١٤٣﴾

ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -

لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ ﴿١٤٤﴾

(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.

۞ فَنَبَذْنَٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌۭ ﴿١٤٥﴾

ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.

وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةًۭ مِّن يَقْطِينٍۢ ﴿١٤٦﴾

அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.

وَأَرْسَلْنَٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ ﴿١٤٧﴾

மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.

فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍۢ ﴿١٤٨﴾

ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள். ஆகையால் அவர்களை ஒரு காலம்வரை சுகிக்; கச்செய்தோம்.

2

இருளில் பிரார்த்தனை

அல்லாஹ் தனக்கு எதிராக எதையும் விதிக்க மாட்டான் என்று நினைத்துக் கோபத்துடன் அவர் சென்றுவிடுகிறார்; இருள்களுக்குள் கூவுகிறார்: “உன்னைத் தவிர வணங்கத் தகுதியானவன் வேறு இல்லை; நீ தூயவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன்.” அல்லாஹ் அவருக்குப் பதிலளித்து, நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவது போல, அவரை அந்தத் துயரிலிருந்து காப்பாற்றுகிறான்.

வசனங்களைக் காட்டு (2)

وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبًۭا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِى ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبْحَٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ ﴿٨٧﴾

இன்னும் (நினைவு கூர்வீராக); துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார் எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்" என்று பிரார்த்தித்தார்.

فَٱسْتَجَبْنَا لَهُۥ وَنَجَّيْنَٰهُ مِنَ ٱلْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُۨجِى ٱلْمُؤْمِنِينَ ﴿٨٨﴾

எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.

3

நம்பிக்கை கொண்ட ஒரு சமூகம்

நகரங்கள் அனைத்தில், யூனுஸின் சமூகத்தாரைத் தவிர வேறு எதுவும் நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை அதற்குப் பயனளிக்கவில்லை. அல்லாஹ் அவர்களை விட்டு உலக வாழ்வில் இழிவு தரும் வேதனையை நீக்கி, சிறிது காலம் வாழவிட்டான்.

வசனங்களைக் காட்டு (1)

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ ءَامَنَتْ فَنَفَعَهَآ إِيمَٰنُهَآ إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّآ ءَامَنُوا۟ كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ ٱلْخِزْىِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍۢ ﴿٩٨﴾

தங்களுடைய ஈமான் பலனளிக்கு மாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி, சிறிது காலம் சகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம்.

நபிமார்கள் பற்றிய கேள்விகள்

நபி Yunus யார்?

யூனுஸ் குர்ஆனில் “மீனுடையவர்” என்று அழைக்கப்படுகிறார்.

Yunus அவர்களின் வரலாறு குர்ஆனில் எங்கே உள்ளது?

அது As-Saffat 37:139–148, Al-Anbiya 21:87–88, Yunus 10:98-ல் உள்ளது. இந்தப் பக்கம் அந்த வசனங்களை அரபியிலும் உங்கள் மொழியிலும் காட்டுகிறது.

This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources