Muslim Flow சோதனையில் உள்ளது; விரைவில் Google Play-யில் வரும். பதிவிறக்கம்

பிறரின் பணத்தை அநியாயமாக எடுப்பது ஹராமா?

ஹராம் பணம் & வணிகம் குர்ஆன் · 2

சுருக்கமான பதில்

ஆம். ஒருவர் மற்றவரின் செல்வத்தை அநியாயமாக உண்ணாதீர்கள் என்றும் (2:188), பரஸ்பர சம்மதத்துடன் நடக்கும் வியாபாரம் ஆகுமானது என்றும் (4:29) அல்லாஹ் கூறுகிறான்.

ஆதாரம்

குர்ஆன்

وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَٰطِلِ وَتُدْلُوا۟ بِهَآ إِلَى ٱلْحُكَّامِ لِتَأْكُلُوا۟ فَرِيقًۭا مِّنْ أَمْوَٰلِ ٱلنَّاسِ بِٱلْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ ﴿١٨٨﴾

அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٍۢ مِّنكُمْ ۚ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًۭا ﴿٢٩﴾

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.

இது பொதுவான தகவல், ஃபத்வா அல்ல. உங்கள் சொந்த சூழ்நிலைக்கு, தகுதியுள்ள ஓர் அறிஞரிடம் கேளுங்கள்.

WhatsApp